புதுக்குடியிருப்பில் 4ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர்?

0 700


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையால் மாவட்டத்தில் பெரும் கொரோனாக் கொத்தணி உருவாகும் அபாயம் இருக்கின்றது என எச்சரிக்கப்படுகின்றது. இதற்கான தயார் படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மாவட்டத்தில் மருத்துவரீதியான பாதுகாப்பு வளப்பற்றாக்குறை காணப்படும் நிலையில் அவற்றை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றவர்களுக்குப் பி.சி.ஆர். சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றியவர்களில் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் முதற்தொற்றாளர்கள் என சுமார் 4ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.


புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்காவே படையினரால் அமைக்கப்பட்டுள்ள 500 கட்டில்களை கொண்ட  திம்பிலி கொரோனா மருத்துவமனையும் இதனைவிட வேணாவில்பகுதியிலும் படையினரால் அமைக்கப்பட்டுவரும் 300 கட்டில்களை கொண்ட கொரேனா மருத்துவமனையும் காணப்படுகின்றது இவற்றை விட முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை,புதுக்குடியிருப்பு ஆதாரமருத்துவமனை,மாங்குளம் மருத்துவமனை என்பன மருத்துவரீதியான தயார்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.