முல்லைத்தீவு மாவட்டத்தில் 443 தொற்றாளர்கள் 538 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!

0 426

முல்லைத்தீவு மாவட்டத்தில் 443 தொற்றாளர்கள் 538 குடும்பங்கள் தனிமைப்படுத்ப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலகர் பிரிவும் முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலகர் பிரிவும் முடக்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


 443 தொற்றாளர்களில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புபட்ட கொரோனா தொற்றளர்களே அதிமாக காணப்படுகின்றார்கள்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலீஸ்பிரிவுகள் கடந்த 18 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலை இன்று காலை 6.30 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது
முள்ளியவளை பொலீஸ் பிரிவில் இரண்டு கிராமசேவைபிரிவும் புதுக்குடியிருப்பு பொலீஸ்பிரிவில் 9 கிராமசேவை பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
மக்கள் அத்திய அவசிய தேவைக்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மக்ளை அவதானமாக செயற்படுமாறு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.