முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பகுதிகள் 6.30 தொடக்கம் விடுவிப்பு!

0 4,660

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சில பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகள் இன்று 21.05.21 காலை 6.30 தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு

 1. தேவிபுரம்
 2. புதுக்குடியிருப்பு மேற்கு
 3. புதுக்குடியிருப்பு கிழக்கு
 4. மந்துவில்
 5. மல்லிகைத்தீவு
 6. கோம்பாவில்
 7. உடையார்கட்டு வடக்கு
 8. உடையார்கட்டு தெற்கு
 9. வள்ளிபுனம்
  முள்ளிவளை பொலிஸ் பிரிவு
 10. முள்ளியவளை மேற்கு
 11. முள்ளியவளை வடக்கு
  ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் இன்று 21.05.21 காலை 6.30 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இன்று நாடுமுழுவதும் இரவு 11 மணிக்கு அமுலாகவுள்ள பூரண பயணத்தடையின்போது கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக பின்பற்றப்படும். என இராணுவ தளபதியும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது. இன்று இரவு 11 மணி தொடக்கம் 25ம் திகதி அதிகாலை 4 மணிவரை பயண கட்டுப்பாடு மிக இறுக்கமாக நடைமுறையில் இருக்கும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தொிவித்திருக்கும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்ந்து 25 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.