புதுக்குடியிருப்பு 9 முள்ளியவளை 2 கிராமங்கள் தொடர்ந்தும் முடக்க பரிந்துரை!

0 1,530

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிடைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து சில கிராமங்களை விடுவிக்குமாறு பிராந்திய சுகாதார பணிமனையினர் கொவிட் செயலணி,முல்லைத்தீவு படை அதிகாரி,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,மாகாண சுகாதார பணிமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 09 கிராம அலுவலர் பிரவுகளும், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 02 கிராம அலுவலர் பிரிவுகளும் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் 20.05.21 இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் வருமாறு,
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு

 1. தேவிபுரம்
 2. புதுக்குடியிருப்பு மேற்கு
 3. புதுக்குடியிருப்பு கிழக்கு
 4. மந்துவில்
 5. மல்லிகைத்தீவு
 6. கோம்பாவில்
 7. உடையார்கட்டு வடக்கு
 8. உடையார்கட்டு தெற்கு
 9. வள்ளிபுனம்
  முள்ளிவளை பொலிஸ் பிரிவு
 10. முள்ளியவளை மேற்கு
 11. முள்ளியவளை வடக்கு
  ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கிராம அலுவலர் பிரிவுகள் 20.05.21 இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.