தனிமையில் இருந்த வயோதிப பெண்ணிடம் செயின்அறுப்பு!

0 185

மாங்குளம் புதிய கொலணியில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணிடம் செயின்அறுப்பு!


மாங்குளம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய கொலனி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் என தன்னை அடையாளப்படுத்தி வீட்டிற்குள் நுளைந்த நபர் வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இன்று(19) மாலை வேளை புதியகொலனி பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.பொதுசுகாதார பரிசோதகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர் வீட்டிற்குள் நுளைந்து விபரம் எடுப்பதாக கூறிவிட்டு தனிமையில் இருந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியினை அறுத்து செல்ல முற்பட்ட போது வயோதிப தாயாரும் தனது சங்கிலியினை இறுகப்பற்றிக்கொண்டதால் சங்கிலி அறுந்து சிறு துண்டு கையில் கிடைத்துள்ளது 


இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளதால் கொள்ளையன் தப்பி ஓடியுள்ளான் இச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.