கொரோனா அடையாளம் காணப்பட்ட பலர் இன்றும் வீடுகளில் இருட்டுமடுவில் பரபரப்பு!

0 554

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்க உட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிய 6 வரையான இளைஞர் யுவதிகளுக்கு கொவிட் 19 இனம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று(18) நண்பகல் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவமனை கொண்டுசெல்தயாராகுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளார்கள்

இன்று மாலை வரை குறித்த ஆறுபேரையும் அவர்கள் வீட்டிற்கு சொன்று ஏற்றாத நிலையில்
கொவிட் 19 தொற்கு இலக்கானவர்களை இருட்டுமடு கிராமத்திற்க பேருந்து வராது என்றும் அவர்களை அவர்களின் உறவினர்கள் ஏற்றிக்கொண்டு உடையார் கட்டு முதன்மை வீதிக்கு கொண்டுவந்து விடுமாறு அறிவித்துள்ளதால் குடும்பத்தினை சேர்ந்தவர்கள் குழப்ப நிலைஅடைந்துள்ளார்கள்.


பொதுசுகாதார பரிசோதகர்களின் இவ்வாறான நடவடிக்கையினால் கொவிட் தொற்று குடும்பத்தினை சேர்ந்தவர்களின் ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளதுடன்
இனம் காணப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் காணப்படுகின்றார்கள் அவர்களை விரைவாக கொரோன மருத்துவமனைக்கு ஏற்றிசெல்லுமாறும் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.