படையினரின் அடையாளப்படுத்தலால் நைனாமடுவில் முக்கிய பௌத்த சின்னம் அடையாளம் காணல்!

0 160

வடக்கில் வவுனியா வடக்கு நைனாமடு காட்டுப்பகுதியில் படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன நினைவுச்சின்னம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களா இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க அவர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளார்.


வவுனியா வடக்கில் உள்ள நைனாமடு கிராமத்தில் 23 சி கிராம அலுவலகர் பிரிவில் காட்டுப்பகுதியில் குறித்த புரதான நினைவுச்சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த காட்டுப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடையங்கள் தொடர்பில் வவுனியா நெடுங்கேணி வீதியில் உள்ள 17 ஆவது விஜயபாகு படை தளபதியால் வுனியா தொல்பொருள் திணைக்களத்திற்கு  தெரிவித்த தகவலுக்கு அமைய குறித்த பகுதி தொல்பொருள்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

8 கற்தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும்,குறித்த பகதியில் பழைய கட்டிடங்களின் கல்லுகள்,ஓடுகள் 100 மீற்றர் வரையான சுற்றப்பகுதிகளில் காணப்படுவதாகவும் புதையல் தோண்டும் நபர்களால் குறித்த முக்கிய பகுதி சிதைக்கப்பட்டுள்ளன.அங்கு காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் கி.மு.4ஆம் 8 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 
வவுனியாவில் இருந்து நைநாமடு சந்தியில் இடப்பக்கம் போகும் போது சின்னடம்பன் ஊடாக நைநாமடு காட்டிற்கு 9.5 கிலோமீற்றர் தூரம் செல்லவேண்டும்.

என்றும் குறித்த பகுதி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் காணப்படுவதாகவும் இதனை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அகழ்வு ஆராச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனர் நிர்மான பணிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.