பயணக்கட்டுப்பாடு ஊராடங்கு போல் கட்சியளிக்கும் முல்லைத்தீவு நகரங்கள்!

0 84

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிக்காணப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினை முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சரியாக கடைப்பிடித்துள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது.


முல்லைத்தீவு நகரம்,புதுக்குடியிருப்புநகரம்,ஒட்டுசுட்டான்,மாங்குளம், மல்லாவி,முள்ளியவளை,போன்ற நகர்பகதிகளில் வணிகநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அற்ற நிலையில் வீதிகளில் படையினரும் பொலீசாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


பயணக்கட்டுப்பாடு என அரசாங்கம் அறிவித்துள்ள போதும் முற்றுமுழுதாக மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளார்கள்.
ஊரடங்கு காலத்தில் இருப்பதை போன்றே மக்களின் நடமாட்டம் முற்றுமுழுமையாக இல்லாதநிலையில் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றியுள்ளமையினை காணக்கூடியதாகவுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினால் மக்கள்கூட்டத்தினை தவிர்த்துவந்துள்ளார்கள்,ஆலய திருவிழாக்கள் சில நிறுத்தப்பட்டுள்ளன.


மக்களுக்கு தேவையான அத்தியசியமான மருத்துவமனை மற்றும் தனியார் மருந்தகங்கள் இயங்கிவருகின்ற நிலையில் சுகாதார பாதுகாப்பு தொடர்பான அறிவித்தல்களை அந்தந்த பிரதேச பொலீசார் வழங்கிவருகின்றார்கள்.

வட்டுவாகல் ஊடாக முல்லைத்தீவு பயணம் 14.05.21 பார்வையிட https://www.youtube.com/watch?v=A6Qgw…

முள்ளிவாய்க்கால் ஊடாக வீதிப்பயணம்.. இன்றைய பொழுது பார்வையிட https://www.youtube.com/watch?v=p6NPU…

புதுக்குடியிருப்பு வீதி ஊடாக.14.05.21பார்வையிட https://www.youtube.com/watch?v=GhCcb…

முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை ஊடான வீதிப்பயணம் ..இன்றைய பொழுதுபார்வையிட https://www.youtube.com/watch?v=-Nqs_…

Leave A Reply

Your email address will not be published.