முள்ளிவாய்க்காலில் நினைவு நிகழ்வு செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு!

0 95


முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்தவர்களை வழமையாக ஆண்டுதோறும் மே 18 ஆம் திகதி நினைவிற்கொண்டு வருகின்றார்கள்.


இன்னிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்அமைந்த பகுதியில் ஏற்பாட்டுக்குழுவினால் நினைவுக்கல் கொண்டுசென்ற வேளை பொலீசார் மற்றம் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன் குறித்த நினைவுகல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் நினைவுத்தூபியும் சேதப்படுத்தப்பட்டுளளது.


இது தொடர்பில் தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள் பலர் தங்கள் கண்டனங்களை வெளிட்டுள்ளார்கள்.இன்னிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுசெய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள்.


கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலீசார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள்.


முல்லைத்தீவு பொலீஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன்,ம.ஈஸ்வரி,பீற்றர் இளஞ்செழியன்,க.விஜிந்தன்,ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.


ஏ.ஆர் 418 கீழ் 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலீசார்தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.