புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0 185

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மந்துவில் பகுதியில் 800 கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
நேற்று 08.05.21 இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.33 அகவையுடைய 8 ஆம்வட்டாராம் மந்துவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குற்றவாளியும் சான்று பொருட்களும் புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.