முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

0 429

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய கொவிட் 19 நிலமைகள் தொடர்பில் 07.05.21 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள் 101 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மாங்குளம் தள வைத்தியாசாலையில் சிற்றூளியராக பணியாற்றி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய 12 பேர் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மாங்குளம் மருத்துவமனை மட்டுப்படுத்தப்பட்டரீதியில் நடவடிக்கை நடைபெற்றுக்கொண்ருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர் ஒருவருக்கும் தொற்று இனம் காணப்பட்டுள்ளது. மாஞ்சோலை மருத்துவமனையில் தொற்று பாதுகாப்பு தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையினர் வைத்திய அதிகாரிகள் மேலதிக நடவடிக்கை எடுத்துவருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பொருமக்களுக்கான அறிவித்தாலாக அனவசியமாக மீதிகளில் செல்லவேண்டாம்,அத்தியவசியமாக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்து சுகாதார நடவடிக்கையினை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் கொரோனாவால் பதிக்கப்பட்டவர்கள் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்து வருகின்றது மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.

எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு தொடர்பிலும் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது முப்படையினர் சுகாதாரபிரிவினர் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.