வணிகப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாணவி சாதனை!

0 116

வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்/மல்லாவி மத்திய கல்லூரியில் வணிகப்பிரிவில் கல்வி பயின்ற மாணவி பத்மநாதன் சங்கவி 3A சித்திகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றியீட்டிய மாணவி தனது அனுபவத்தினை இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் பல நாட்கள் இரவும் பகலும் விடாமுயற்சி செய்து தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். இந்த வெற்றியில் எனது பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர் என அனைவருக்கும் பங்குண்டு.

இனி பரீட்சை எழுதவிருக்கும் தம்பி, தங்கையர்கள் அனைவருக்கும் சொல்வது என்னவென்றால் நீங்கள் பாடசாலையிலோ, பிரத்தியேக வகுப்புகளிலோ கற்கும் விடயங்களை வீட்டிற்கு வந்து அன்றைய தினமே மீட்டிப் பார்த்தாலே நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.