மாங்குளம் வைத்தியசாலையில் புதிய கொரோனா கொத்தணியா?

0 221

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலையில் கடந்த 30.04.2021 ஆம் திகதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் கொரோனா  கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது இதுவரை வைத்தியசாலை ஊழியர்கள் சுமார் ஒன்பது பேர் கொரோனா தொற்று க்குள்ளாகியுள்ளனர்
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும்  முறுகண்டி பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 30.04.2021 ஆம் திகதி 
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை  தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் இன்று கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்னும் பத்து பேருக்கு மேற்பட்ட ஊழியர்களின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை அவை நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் குறித்த வைத்தியசாலை ஊழியர்களின் ஊடாக கொரோனா கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது
வைத்திய சாலையின் வைத்தியர் மருந்தாளர் தாதியர் சாரதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் கணவர் மல்லாவி வைத்தியசாலையில் பணிபுரியும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து மல்லாவி வைத்தியசாலை ஊழியர்களிடமும் பிசி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன 
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதோடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வள்ளிபுனம் பகுதியில் இன்று மேலுமொரு தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார்
இவர் ஹற்றன் பகுதியில் உள்ள கல்வியற்கல்லூரியில் இருந்து வருகை தந்துள்ளார் இவர்கள் தனியான ஒரு பேருந்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களை சேர்ந்த 52 பேர் வருகை தந்துள்ளனர் குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் தங்களுடைய பகுதி சுகாதார துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்
இதேவேளை முல்லைத்தீவில் மூன்று தினங்களில் 13 பேர் கொரோனா  தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.