வடக்கில் 15 கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இரு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது!

0 157

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் இடப்பெற்ற 15 கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கியகொள்ளையர்கள் 5 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் கொள்ளையிட்ட 50 பவுண் நகைஉள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
இந்த கொள்ளையர்கள் கைது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.அமரசிங்க கருத்து தெரிவிக்கையில்..
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8 கொள்ளை சம்பவங்களும்,கிளிநொச்சியில் 03 கொள்ளை சம்பவமும்,யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 2 கொள்ளைச்சம்பவமும்,முல்லைத்தீவில் 2 கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று ஆண்கள் உள்ளிட்ட ஜந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த கொள்ளைச்சம்பவங்கள் ஒரு குழுவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகள் வங்கியில் அடைவு வைக்கப்பட்டுள்ளதுடன் நகை கடைகளில் அவர்களின் உறவினர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கொள்ளைக்கும்பலின் முதலாவது சூத்திரதாரி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தினை சேர்ந்தவர் எனவும் இரண்டாவது கொள்ளையர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சுழிபுரத்தினை சேர்ந்தவர் எனவும் முதலாவது கொள்ளையன் குடு எனப்படும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் குறித்த குழு கடந்த 03 ஆண்டுகளாக கொள்ளையடித்து நகைகள் பொருட்களை விற்பனைசெய்தும் அடகுவைத்தும் வைத்துள்ளார்கள்.
நீண்டகாலமாக இவர்களை தேடிவந்த புதுக்குடியிருப்பு பொலீசார் அண்மையில் கோம்பாவில் பகுதியில் வீடு உடைத்த கொள்ளைச்சம்பவத்தின்போது இவர்கள் கிராமத்தில் உள்ள கடை ஒன்றின் சி.சி.ரிவியில் பதிவாகியுள்ள நிலையில் இவர்களை தேடிய புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தiமையிலான குழுவினர்கள் இவர்கள் வீடுகளில் இல்லாத நிலையில் தலைமறைவில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்னிலையில் ஆனந்தபுரம் பகுதி காடு ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் 30.04.21 அன்று இரவு கைதுசெய்துள்ளார்கள்.இவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட கையடக்க தொலைபேசிகள்,விற்பனை செய்யப்பட்ட நகைகள்,மற்றும் வீடுகளில் உண்டியலில் உடைக்கப்பட்ட பணங்கள்,உள்ளிட்ட பெருட்கள் மீட்கப்பட்டுள்ள.
15 கொள்ளைச்சம்வத்தின் போது 150 பவுண் வரை கொள்ளையடித்துள்ளார்கள் ஆகக்கூடுதலாக புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வீடுஒன்றில் இருந்து 19 பவுண் நகைகள் கொள்ளையிட்டுள்ளார்கள்.
தற்போது 50 பவுண் வரையில் இவர்களின் தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.