மாவட்ட வைத்தியாசலை அருகில் மரம் முறிந்து வீழ்ந்து ஒரு மணிநேரம் போக்குவரத்து தடை!

0 121

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முல்லைத்தீவு  மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒரு மணித்தியாலம் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது  

முல்லைத்தீவு  மாங்குளம் பிரதான வீதி ஓரத்தில் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென வீதிக்கு குறுக்காக  முறிந்து விழுந்துள்ளது குறித்த மரம் விழுந்ததில் தெய்வாதீனமாக வீதியில் பயணம் செய்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை  

குறித்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் இளைஞர்கள்  வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் முள்ளியவளை பொலிசார் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீதியில் வீழ்ந்து கிடந்த  மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்

சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் குறித்த மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியது அண்மையில் முல்லைத்தீவில் இவ்வாறு மரம் ஒன்று வீதிக்கு குறுக்காக விழுந்து இருவர்  உயிரிழந்தனர் இன்று தெய்வாதீனமாக உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை குறித்த வீதியில் மரம் முறிந்து விழுந்த பகுதிக்கு அண்மையாகவும் ஏனைய இடங்களிலும் வீதியோரத்தில் அபாயகரமான நிலையில் காணப்படும் மரங்களை உடனடியாக அகற்றி எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாதிருக்க சம்மந்தப்படட தரப்பினர் ஆவண செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் 

Leave A Reply

Your email address will not be published.