இடது கரையில் தீவிபத்து இருகடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் ஒருவருக்கு தீக்காயம்!

0 301

முல்லைத்தீவு ஒட்டுசுட்டனர் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு இடதுகரை சந்திப்பகுதியில் இன்று (29) மாலை கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மேலும்ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதுடன் கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடைஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினை தொடர்ந்து தீபரவி இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றும் ஒரு கடை பகுதியளவில் சேமடடைந்துள்ளன.
இந்த தீவிபத்தின் போது முத்தையன் கட்டினனை சேர்ந்த 72 அகவையுடை செல்லப்பா அரிராசசிங்கம் என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
தீவிபத்தினை கட்டுப்படுத்த படையினர் பிரதேச இளைஞர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு தண்ணீர் பாச்சியுள்ளதுடன் படையினர் தண்ணீர் பவுசர்கள் கொண்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த தீவிபத்து சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.