வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு சுகாதார கட்டுப்பாட்டுடன் வெளிமாவட்டத்தவர்களுக்கு தடை!

0 130

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு சுகாதார கட்டுப்பாட்டுடன் வெளிமாவட்டத்தவர்களுக்கு தடை-முன்னாயத்த கூட்டத்தில் தெரிவிப்பு!
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்தியா அதிகாரி எஸ்.சிவகணேசன்மற்றும் தொற்று நோயியல் தடுப்புவைத்திய அதிகாரி வி.விஜிதரன், படை அதிகாரிகள்,பொலீஸ் பொறுப்பதிகாரிகள்,முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயம்,மற்றும் வற்றாப்பளை ஆலய நிர்வாகத்தினர்,பொது சுகாதார பரிசோதகர்கள்,மருத்துவர்கள்,பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆலய பொங்கல் நிகழ்வு நடத்து வது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளார்கள்.
வற்றாப்பளை கண்கி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்விற்கான முன்ஆயத்த நிழக்வுக்கான முன் நிகழ்வுகள் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலத்தில் நடைபெறவுள்ளது இதன் படி வைகாசி மாதம் 10 ஆம் திகதி பாக்குத்தெண்டல் நிகழ்வும் 17 ஆம் திகதி முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலுயத்தில் இருந்து சிலாவத்தை தீர்த்தக்கரையில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு 23 ஆம் திகதி வரை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்சி பூசைகள் இடம்பெற்று 24 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல்நிகழ்வு நடைபெறவுள்ளது குறித்த பொங்கல் விழாவினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆலய பொங்கல் விழாவிற்கு ஒரு மாத காலப்பகுதியிருப்பதனால் அத்தியவசிய முடிவுகள் எட்டப்பட்டதுடன் மேலும் இரு வாரங்களினுள் அடுத்த கலந்தரையாடலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது பொது சுகாதார நடைமுறைகளுடன் நடாத்தவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் காவடி எடுத்தல் முதலான நேர்த்திக் கடன்கள் தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது.
அடியவர்கள் ஆலய வழிபாட்டிற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விடையங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்
இது குறித்து ஊடகங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,வற்றாப்பணை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக தலைவர் மு.குகதாசன்,முள்ளியளை காட்டுவிநாயாகர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கருத்துதெரிவிக்கையில்
பக்த்தர்களை மட்டுப்படுத்தரீதியில் நேர்த்திக்கடன் வருகின்றவர்கள் காவடி எடுப்பதற்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது,வீதி கடைத்தொருக்கள் தடைசெய்யப்பட்டுள்ளது,சுகாதார ஆலோசனைக்கு அமைவாக கோவிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்
ஆலயத்திற்கு வருகின்ற பக்த்தர்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னனெடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளோம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா குறைவாக இருந்தாலும் வெளிமாவட்டங்களில் பரவல் அதிகரித்துள்ளகாரணத்தினால் அங்குள்ளவர்கள் வருவதை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டுவிநாயகர் ஆலய நிர்வாக தலைவர் ச.கனகரத்தினம் கருத்து தெரிவிக்கையில்.
வற்றாப்பளை கண்கி அம்மன் பொங்கலுக்கான தீர்தம் எடுக்கும் நிகழ்வு 17 ஆம் திகதி காட்டுவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்று தொடர்ந்து 24 ஆம் திகதி வரை காட்டுவிநாயகர் ஆலயத்தில் தீர்த்தம் எரிந்து கொண்டிருக்கும் கூட்டம் கூடாது கட்டுப்பாட்டுடன் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் அம்மன் தான் நோயினை தீர்க்கும் என்று மக்கள் வருகின்றார்கள் உண்மையும் அதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக தலைவர் மு.குகதாசன்
கடல் தீர்த்தத்தில் விளக்கேற்றும் நிகழ்வு இந்த முறையும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள் வருவதை இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறு பணிவாக வேண்டுகின்றோம் சுகாதார கட்டுப்பாட்டுடன் ஆலோசனைகளுடன் பொங்கல் நிகழ்வினை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.