புதுவருட கிண்ணத்தை கைப்பற்றியது அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு கழக அணி!

0 134

வருடந்தோறும் புதுவருடத்தை முன்னிட்டு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் அளம்பில் இளம்தென்றல் விளையாட்டுக்கழக அணியினர் சம்பியன் களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

7வது தடவையாக. இந்த வருடத்திற்கான போட்டி  வற்றாப்பளை செந்தமிழ விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்றது

ஏழாவது தடவையாக இடம்பெற்ற இந்த போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று மாலை இடம்பெற்றன   இறுதிப் போட்டியில் உடுப்புக்குளம் அலைஓசை விளையாட்டுக்கழக அணியினரும் அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக அணியினரும்  மோதிக் கொண்டனர் போட்டி இறுதி நேரம் வரை  எந்த அணிகளும் எந்தவித கோல்களையும்  போடாத நிலையில் தண்ட உதை  மூலமாக அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு கழகத்தினர் வெற்றிவாகை சூடினர்

இந்த போட்டியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட விமானப்படையை கட்டளைத் தளபதி கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்  உள்ளிட்ட பல்வேறு அதிதிகள் கலந்துகொண்டு வெற்றியீடடிய வீரர்களுக்கான வெற்றி கிண்ணங்களை வழங்கி கௌரவித்தனர்

போட்டிகளில் ஆட்ட நாயகன் சிறந்த கோல் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் போட்டியில் கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.