புதுக்குடியிருப்பு சந்தையில் கோழி இறச்சியின் விலை 900 ரூபா!

0 275

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொது சந்தையில் கோழி இறச்சியின் விலை 900 ரூபா வரைவிற்பனை செய்யப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.


புதுக்குடியிருப்பு பொது சந்தையில் உள்ள இறச்சி கடையில் கோழிஇறச்சி 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது வெளியிடங்களில் அறுநூறு தொடக்கம் எழுநூறு ரூபா வரையில் விற்பனையாகிக்கொண்டிருக்கும் நிலiயில் சந்தையில் உள்ள கோழி இறச்சிக்கடையில் ஏன் இவ்வளவு விலை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.


இதனால் சந்தையில் கோழி இறச்சி வாங்குவதை தவிர்த்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளதுடன் பிரதேச சபையின் ஆழுமையின் கீழ் உள்ள குறித்த சந்தையில் விலைக்கட்டுப்பாட்டு பகுதியினர் சரியான முறையில் விலைகளை கண்காணிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.