நீராவிப்பிட்டியில் கத்திக்குத்திற்கு இலக்கான குடும்பஸ்தர் பலி!

0 239

நீராவிப்பிட்டி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி  யாழ் போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 16.04.2021 அன்று கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்


யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி 19.04.21 உயிரிழந்துள்ளார்


குறித்த நபர் மீது குடும்பத்தகராறு காரணமாக கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன
சம்பவத்தில்  நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ்  என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.