Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தரித்து செல்லும் புகையிரதம்!

மாங்குளம் புகையிரதநிலையத்தில் 21/10/2023  முதல் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டதைஅடுத்து இன்று கடுகதி  புகையிரதம் காலை 11மணிக்கு  நிறுத்தப்பட்டது  

முல்லைத்தீவு மக்களினால்நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பலதரப்பட்டவர்களின்முயற்சியினால் தற்போது இந்த விடையம்  சாத்தியமாகியது.

 திணைக்களத்தால்வெளியிடப்பட்ட நேர அட்டவணைப்படி 05.10 க்குகொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் 10.42 க்கு மாங்குளத்தை வந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும் ( ஒவ்வொருசனிக்கிழமைகளில்)யாழ் நிலா இரவு 2200 மணிக்குபுறப்பட்டு மாங்குளத்திற்கு அதிகாலை 4.20 க்குவந்தடைந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்(வெள்ளிக்கிழமை மட்டும்) காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 க்கு புறப்படும்குளிரூட்டிய கடுகதி புகையிரதம் மாங்குளத்திற்கு 14.54 ற்குவந்தடைந்தது கொழும்பை நோக்கி செல்லும்( ஞாயிறு மட்டும்) யாழ்நிலாபுகையிரதம்காங்கேசன்துறையில் இருந்து இரவு 21.30 க்குபுறப்பட்டு மாங்குளத்திற்கு இரவு 23.20 க்குவந்தடைந்து கொழும்பு நோக்கி செல்லும் என தெரிவிக்கப்படுகிறது

 இதேவேளை குறித்த புகையிரதநிலையத்தில் முற்பதிவு பயண சீட்டு பெற்றுக்கொள்ளல் இதுவரை இல்லாத சூழலில்மாங்குளம் மற்றும் முல்லைத்தீவு ,மல்லாவி மக்கள் கிளிநொச்சி அல்லது வவுனியா சென்றேகுறித்த சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக மக்கள் தெரிவித்த மக்கள் அந்த ஒழுங்கு நடவடிக்கையினையும் மாங்குளத்தில் அமுல் படுத்தப்ப்படுமாயின் இன்னும் நல்லது என தெரிவித்தனர் 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *