காளிகோவிலடி பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!

0 855


புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதியில் காளிகோவிலடியில் அமையப்பெற்ற பாலம் திருத்தப்பணிககள் நடைபெற்று வரும் நிலையில் 14.04.21 அன்று இரவு புதிதாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பாலத்திற்கு வேகமாக சென்ற உந்துருளி விபத்துக்குள்ளாகியதில் 37 அகவையுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அதில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காளிகோவிலடி பாலம் திருத்தப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மக்களின் போக்குவரத்திற்காக  மாற்று பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரைப்புத்தாண்டு இரவு 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வேகமாக சென்ற உந்துருளி திருத்தப்பணிகள் மேற்கொண்டுவரும் பாலத்திற்குள் எச்சரிக்கை சமிஞ்சையினை தாண்டி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதில் பயணித்த திருகோணமலை திரியாய் 06 ஆம் வட்டாரம் கட்டுகு;குளத்தினை பிறப்பிடமாகவும் மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டினை வசிப்பிடமாக கொண்ட 37 அகவையுடைய 03 பிள்ளைகளின் தந்தையான அழகானந்தான் காந்தன் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.