புதுக்குடியிருப்பில் அகவன் கல்விநிலையம் திறந்துவைப்பு!

0 450

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் அகவன் என்ன தனியார் கல்விநிலையம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகரதாலிங்கம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


10 ஆம் வட்டாரத்தில் நீண்டகாலமாக மாணவர்களுக்கான தனியார் கல்விநிலையம் இல்லாத நிலையில் புலம் பெயர் உறவுகளான வசந் அதிசா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் கல்வி நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோநோகராதலிங்கம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜயந்,மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் சிறப்புற நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் கட்டத்தினை கட்டி அமைத்த கட்ட தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.