முல்லைத்தீவு செல்வபுரத்தில் பரபரப்பினை ஏற்படுத்திய மர்மபொதி!

0 689

முல்லைத்தீவு செல்வபுரம் யூதா ஆலய வளாகத்தில் உள்ள மர்ம பொதியினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


31.03.21 மாலை 5.00 மணியளவில் மர்ம பொதி ஒன்று யூதா ஆலத்திற்குள் இருப்பதாக முல்லைத்தீவு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற படையினர்,பொலீசார் குறித்த பொதியினை சோதனை செய்யும் நடவடிக்கையில் சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன்போது குறித்த பொதிக்குள் தோங்காய் பொச்சு மட்டைகளும் சிரட்டைகளும் காணப்பட்டுள்ளது.


குறித்த பகுதிக்குள் எவரும் செல்லவிடாத நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனைநடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் மர்ம பொதிகள் ஏதும் காண்பபட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு உடன் தகவல்கொடுக்குமாறு அறிவிக்கப்பபட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.