தபால் ஊழியர்கள் போராட்டம் – முல்லைத்தீவிலும் சேவைகள் பாதிப்பு!

0 90

நாடு தழுவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்கள், நியமனங்கள் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நித்தப்போராட்டம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் திணைக்களத்துடன் தொடர்புடைய சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.


பொதுவாக மின்கட்டணம்,தண்ணீர் கட்டணம் கடிதங்கள் உட்பட பல்வேறு சேவைகளை இலகுவாக தபால் திணைக்களத்தின் ஊடாகவே பொது மக்கள் செய்துவருகின்றனர்.

முல்லைத்தீவு,முள்ளியவளை,புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில்
இன்று(31) திகதி தபால் அலுவலகங்களுக்கு வருகை தந்த பொது மக்கள் தங்களது தேவைகைள நிறைவேற்றிக்கொள்ள முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.


இதனால் இன்றைய தினம் அரச மற்றும் தனிநபர்களுக்கு விநியோகிக்க வேண்டிய கடிதங்களும் விநியோகிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.