மூங்கிலாற்றில் சட்டவிரோத மின் பாவனை கட்டுப்படுத்த கோரிக்கை!

0 61


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் அனுமதியற்ற முறையில் ஒருசிலர் வீடுகளில் கனரக மோட்டார்கள்களை பயன்படுத்தி மரம் அறுத்தல் இரும்பு ஒட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டுவருவதால் பலரது வீடுகளில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.


குறித்த கிராமத்தில் இரவு நேரங்களில் வீடுகளில் வைத்து மரப்பட்டறைகள்,இரும்பு ஒட்டுதல் போன்ற வேலைகளை ஒருசிலர் செய்வதால் அவ்வப்போது மின்சாரம் குறைந்து கூடுகின்றது இதனால் சிலரது வீடுகளில் உள்ள மின்விளக்குகள் செயலிழந்துள்ளது.
இதுகுறித்து மின்சார சபைக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.