நாயாற்று பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தங்கபுரத்தினை சேர்ந்த ஒருவர் பலி!

0 300


16.03.21 அன்று மாலை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இருந்து அளம்பில் நோக்கி உந்துருளியில் பயணித்த வேளை வேக கட்டுப்பாட்டினை இழந்த உந்துருளி நாயாற்று பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.


உந்துருளியில் பயணித்த இருவரும் பாலத்தில் மோதி படுகாயமடைந்துள்ளார்கள்
இதன்போது அளம்பில் தங்கபுரத்தினை சேர்ந்த 26 அகவையுடைய இராசன் மோகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் அதே கிராமத்தினை சேர்ந்த 56 அகவையுடைய கோபால் புஸ்பராச என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனை எடுத்துசெல்லப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.