நீங்கள் அணிவது S.L.S தர தலைக்கவசமா?

0 120

எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பொறிக்கப்பட்ட தலைக்கவசத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர் செயற்பாடு முல்லைதீவு மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சர்வதேச பாவனையாளர் தினத்தை (மார்ச்- 15)  முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட அதிகாரி ந.கிருஸ்ணகுமார் தலைமையில் முல்லைத்திவு மாவட்டத்தின்  புதுகுடியிருப்பு பகுதியில் புதுகுடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பொறிக்கப்பட்ட தலைக்கவசத்தின் முக்கியத்துவம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.


இவ் விழிப்புணர்வு நிகழ்வின் போது வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு பாவனையாளர்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால்  எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பொறிக்கப்பட்ட தலைக்கவசம் தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.