வியாபார அனுமதிப்பத்திரத்தினை உடன் எடுக்கவேண்டும்-முள்ளியவளை பிரதேச சபை!

0 89


முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள முள்ளியவளை உப அலுவலத்தின் ஆழுகையின் கீழ் உள்ள மக்களுக்கான அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார்கள்.


முள்ளியவளை சபையின்  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு முறையான அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்.


மக்களின் காணிகளில் வீதியோர பற்றைகளை அகற்றி சுத்தமாக பேணப்படாத சந்தர்ப்பத்திலும் பொது இடங்களில் மக்களால் குப்பை போடப்படும் சந்தர்ப்பத்திலும் குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும்.


முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட வியாபார மற்றும் தொழில் நிலையங்கள் அனைத்திற்கமான 2021 ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக பெற்றுக்கொள்ளவேண்டும்.


எதிர்வரும் 31.03.21 ற்கு முன்னர் நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது நீதிமன்றில் பிரதேச சபைமூலம் வழக்குத்தாக்கல் செய்யப்படும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முள்ளியவளை உபஅலுவலகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.