கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரின் பதவி வெற்றிடத்திற்கு மோகனராஜசிங்கம் விக்னா தெரிவு!

0 538


முல்லைத்தீவு கரைதுறைப்பற்ற பிரதேச சபையின் தெரிந்து எடுத்து அனுப்பப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பதவி கேட்டு விலகியமை காரணமாக நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்டுள்ளது.

இன்னிலையில் தேர்தல் சட்டத்தின்(66)(அ) 1 ஆம் பிரிவின் கீழ் தெரிந்து எடுக்கப்பட்ட உறுப்பினர் ம.சுபாஸ்கர் என்பவர் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியின் செயலாளர் 30 நாள் காலக்கெடுவுக்குள் உள்ளுர் அதிகார சபையின் தேர்தல் கட்டளை சட்டத்தின் கீழ் வேட்பாளாரோ அல்லது உறுப்பினரோ தேர்ந்தெடுக்க பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதன் படி கட்சியால் மோகனராஜசிங்கம் விக்னா வின் பெயர் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த வர்த்தக மானியில் அறிவிப்பு(09.03.21) வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 18.03.21 அன்று நடைபெறவுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் புதிய உறுப்பினர் தனது பணிகளை தொடங்கவுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.