துணுக்காயில் இரண்டு குடும்பங்களுக்கு வீடு கையளிப்பு!

0 24

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தூரநோக்கு சிந்தனையில் உருவாகிய “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் செயற்றிறன் மிக்க கொள்கைப் பிரகடனத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கல்விலான் குளம் பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சமூர்த்தி பெறும் இரண்டு குடும்பங்களுக்கான தலா இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீட்டை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் இன்று (07.03.2021) நாடாவை வெட்டி பயனாளிகளுக்கு கையளித்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி. லதுமீரா உட்பட சமூர்த்தி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட மை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.