மாங்குளம் புதிய கொலனி பகுதியில் மணல் அகழ்வு மூவர் மருத்துவமனையில்!

0 86


முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் உள்ள புதிய கொலணி பகுதியில் மணல் அகழ்வோருக்கு இடையில் நேற்று 05.03.21 இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் நேற்று இரவு இருவர் அடிகாயற்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


இன்னிலையில் 06.03.21 இன்று காலை மணல் அகழ்வோருக்கிடையில் தொடர்ந்த முறுகல் நிலையினை தொடர்ந்து ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து மாங்குளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வோருக்கு இடையிலும் கிராம மக்களுக்கு இடையிலும் முறுகல் நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது என்றும் இதனை கட்டுப்படுத்தும் திணைக்களங்களின் அசமந்த போக்கு காரணமாகவே இவ்வாறன நிலை தொடர்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.