புதுக்குடியிருப்பு மூங்கிலாற்றில் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!

0 88


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு திலீபன் வீதியில் வீட்டுக்கிணறு துப்பரவு செய்தபோது வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளன.


04.03.21 அன்று மாலைவேளை கிணறு துப்பரவு பணியின் போது கிணற்றுக்குள் வெடிபொருட்கள் இருப்பது வேலையாட்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸாருக்கு தகவல்கொடுத்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் துப்பரவு செய்யப்பட்ட கிணற்றில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது.
அனைத்தும் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 66 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த புதுக்குடியிருப்பு பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.