சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அங்குரார்ப்பணம்!

0 53

அதிமேதகு ஜனதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கமைய சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(05) காலை 8.30மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள வேனாவில் கைவேலி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலாளர் சி.ஜெயக்காந் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.இந் நிகழ்வில் அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து குறித்த நிகழ்சித்திட்டத்தின் பெயர்ப்பலகை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனைக்கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டனர்.

இதன்போது அவர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கேட்டறிந்து கொண்டார்.மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்து கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.