பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சபைஉறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை!

0 53


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக்கூட்டம் 02.03.21 அன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரின் பங்குபற்றல் வேண்டும் என்றும் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படவேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.


22 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் கட்சிரீதியாக ஒரு உறுப்பினர் கலந்துகொள்ளலாம் என பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழரசு கட்சியின் ஆழுகையின் கீழ் உள்ள பிரதேச சபையில் பத்திற்கு மேற்பட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள் தங்கள் வாட்டாரங்களில் உள்ள பிரச்சினைகளை பிரதேச அபிவிருத்திக்கழு கூட்டத்தில் எடுத்துக்கூற முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.


புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுகூட்டத்தில் சகல உறுப்பினர்களும் கலந்துகொள்ள பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டு என தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.