இந்திய மீனவர்களின் பிரச்சனை பத்தாயிரம் படகுகளுடன் சென்று பேசிப்பார்ப்போம்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

0 39


இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று அந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் மூன்று நாள் மக்கள் 26.02.21 அன்று தொடக்கம் நடைபெற்று வருகின்றது இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கில் நீர்வேளாண்மையினை வேகமாக விரைவாக செய்வதற்கு உத்தேசித்துள்ளேன் இரண்டு ஆண்டுகளுக்குள் வடகிழக்கில் வாழ்கின்ற கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தலாம் என்று நம்புகின்றேன்.

இதற்கு கடற்தொழிலாளர்களும் ஒத்துளைக்கவேண்டும்.இலங்கை கடல் இலங்கை மக்களுக்கு சொந்தம் ஒருவரின் தொழில் இன்னொருவரை பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்,அத்துமீறல் சட்டவிரோத தொழில்களுக்கும் இடம்கொடுக்கமுடியாது.

இதேவேளை இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்.
இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் இந்திய மீனவர்களின் பேச்சு வார்த்தை வருவது போவதாக உள்ளது தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இதனை தீர்த்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம்,தொழில்முடக்கம்,அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தினை முடக்குவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

நான் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோன் இருந்தாலும் அது நியாயமான கோரிக்கை இதனை நான் விரைவில் தீர்க்க  முற்படுவேன் 
பத்தாயிரம் கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு போய் அங்குள்ள கடற்தொழிலாளர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் கதைப்பதாக நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருந்தேன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று அந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.