மக்கள் பாவனைக்காக புதிய 20 ரூபாய் நாணயம் பிரதமரால் வெளியீடு!

0 23

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (2021.02.26) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் புதிய 20 ரூபாய் நாணயம் கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது.

இப்புதிய 20 ரூபாய் நாணயம் ஏனைய பணத்தாள்கள் மற்றும் நாணயங்களுடன் கொடுப்பனவிற்காக 2021 மார்ச் 03ஆம் திகதி முதல் புழக்கத்திற்கு வரும்.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.