கொக்குளாய் கடல்நீர் ஏரியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை கட்டுப்படுத்த அமைச்சரிடம்​ கோரிக்கை!

0 32


முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.


26.02.21 அன்று செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள்,கடற்தொழில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களின் தேவை மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.


இதன்போது முல்லைத்தீவு கொக்குளாய் கடல்நீர் ஏரியில் புல்மோட்டை மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவருடன் சட்டத்திற்கு புறம்பான இயந்திர படகுகளையும் பாவித்து வருகின்றார்கள் இவர்களை பிடிப்பதற்காக கடந்த வாரத்தில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் பிரதேச சங்கங்க பிரதிநிநிதிகளுடன் சிறப்பு அதிரடிப்படையினரும் சென்றபோது இரண்டு படகுகளும் நூற்றுக்கு மேற்பட்ட தடைசெய்யப்பட்ட கூடுகளும் பிடிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு படகு தப்பிஓடிவிட்ட நிலையில் புல்மோட்டை மீனவர்கள் குழப்பத்தினை ஏற்படுத்தி சிறப்பு அதிரடிப்படையினர்தான் தங்களை காப்பாற்றி கடலில் இருந்து வெளியேற்றியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.