வைத்தியசாலை சிற்றூளியர்கள் பணிபுறக்கணிப்பு பதில் கடமையில் படையினர்!

0 143


நாடளாவியரீதியில் வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 24.02.21 தொடக்;கம் இரண்டாவது நாளாக இன்று(25) வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்றது.நாடளாவியரீதியில் சுகாதார சேவை தொழில் சங்க ஒன்றியம் கோரிக்கைகளை விடுத்து பணிப்பறக்கணிப்பிற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்கள்.


முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் மக்களுக்கு எதுவித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு சுகாதா சிற்றூளியர்களின் பணியினை மேற்கொண்டுவருகின்றார்கள்.


மாஞ்சோலை மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்கள் மருத்துவசேவையினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் படையினரின் இவ்வாறான செயற்பாடு அமைந்துள்ளதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.


படையினரை கொண்டு மக்கள் சேவையினை அரசு மேற்கொள்ளுமாக இருந்தால் அரச உத்தியோகத்தர்கள் எதற்கு என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்துள்ளது.
இது படையிரின் ஆட்சியினை எடுத்துக்காட்டு செயற்பாடக அமைந்துள்ளது.


25.02.21 இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது வரை படையினரே செய்துவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.