முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய தூதுவர்!

0 5

யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் இன்று(18) மாலை 4.15மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் M.கிருபாசுதன் ஆகியோர் வரவேற்றதைத் தொடர்ந்து நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் இச் சந்திப்பின் போது இந்திய அரசாங்கத்தினால் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.