பழ நெடுமாறனுக்கு கொரோனா சிகிச்சையில்!

0 16


இந்தியாவின் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்கள் உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் உலக தமிழர் பேரமைப்பு நிறுவன தலைவர் பழ.நெடுமாறன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தது.


இதையடுத்து பழ.நெடுமாறனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த பரிசோதனையின் முடிவுகள் 12.02.21 நேற்று வந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து பழ.நெடுமாறன் நேற்று சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.