வட்டுவாகல் பாலத்தில் மின்விளக்கு பொருத்தி தருமாறு மீனவர்கள் கோரிக்கை!

0 4

வட்டுவாகல் பாலத்தில் வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் தற்போது இறால் பிடி தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் இரவு நேரங்களில் அதிகளவான மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் வெளிச்சம் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.


வட்டுவாகல் பாலம் ஊடாக பயணிக்கும் ஊர்திகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன் பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 7 மின்கம்பங்கள் காணப்படுகின்றன ஒன்றில் கூட மின்விளக்கு இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை மீனவர்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.


வட்டுவாகல் பாலத்தின் அருகில் இருந்தே இறால் பிடி நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபடுகின்றார்கள் வெளிச்சம் இல்லாத நிலையில் வானகங்களின் வெளிச்சதினை நம்பியே இந்த பாலப்பகுதி அமைந்துள்ளது.


கடற்தொழில் அமைச்சு வட்டுவாகல் பாலத்தினை புனரமைப்பு செய்து தருவதாக சொல்லியும் இந்த பாலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை இன்னிலையில் தற்போது இறால் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இறால் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் இதனை கருத்தில் கொண்டாவது மீனவர்களின் வாழ்வாதார நிலையினையும் கொண்டு பாலத்தினை இரவு நேரங்களில் மிதிவண்டிகள்,உந்துருளிகளில் பயணிப்பவர்களின் இலகுவிற்காவும் மின்விளக்கு பொருத்தி தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

Leave A Reply

Your email address will not be published.