சர்வமத வேலைத்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு!

0 2


கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நான்கு வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 12மாதவிளக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சர்வமத வேலைத்திட்ட நிகழ்வானது இன்று(11) காலை 10.00மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.சர்வமத வழிபாட்டிடங்களான இந்து ஆலயம், கிறிஸ்தவ வணக்கஸ்தலம், முஸ்லீம் பள்ளிவாசல், பௌத்த மத வணக்கஸ்தலம் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்குபற்றலுடன் ஆசீர்வாத பூஜை வமிபாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்மாக முல்லைத்தீவு இன்று செல்வபுரம் யூதாததேயு தேவாலயத்தில் முல்லைத்தீவு பங்குத்தந்தை வண. ஏ.ஒகஸ்ரின் அவர்களின் தலைமையில் ஆசீர்வாத பூஜையுடன் ஏனைய மத தலைவர்களது ஆசீர்வாத உரை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவாக மரநடுகை இடம்பெற்றது.

பல்லினசமய சமூக கட்டடைப்பை கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் மத ஒற்றுமை சகவாழ்வு என்பவற்றை வலியுறுத்துவதாக கருத்துரைகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் லி.கேகிதா, மத தலைவர்கள், கலாசார அலுவல்கள் பிரிவின் இணைப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் அகியோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.