கிணற்றிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு!

0 13

வவுனியா ஓமந்தை பகுதியில் சிறுவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான அபிசக் என்ற சிறுவனே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து ரியூசன் செல்வதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று காலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் அயல்வீட்டு கிணற்றில் சடலமாக இருக்கின்றமை அவதானிக்கப்பட்டது. அவரது தாயார் வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையில் தந்தையார் மற்றும் அப்பம்மாவுடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் தந்தையார் வீட்டில் இருக்கவில்லை. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.