முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!

0 5

முல்லைத்தீவு முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் கூழாமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.


08.02.21 அன்று மாலை கீச்சுக்குளம் கூழாமுறிப்பு பகுதியில் இரண்டு உந்துருளிகள் மோதிக்கொண்ட விபத்தின் போது 01 ஆம் வட்டாரம் முள்ளியவளையினை சேர்ந்த 35 அகவையுடைய யோகலிங்கம் சிவரூபன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ்பொது மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுவரப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


காயமடைந்த மற்றும் ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.