காட்டுயானையால் அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்!

0 15

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் காட்டுயானையால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.விவசயாத்தினையே வாழ்வாதாரமாக கொண்டு பயன்தரு தென்னை மரங்கள்,வாழை செய்கைகளை காட்டுயானை அழித்துள்ளன.


30 வரையான தென்னை மரங்களும் 150 வரையான வாழையும் இரவு காட்டுயானை அழித்துள்ளன.தொடர்ச்சியாக காட்டுயானையின் தொல்லையால் விவசாய செய்கையினை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்


தேங்காயின் விலை அதிகமாக காணப்படுவதாலும் கப்பல் வாழை இன செய்கையில் ஈடுபட்டுள்ளதால் பெறுமதியான கப்பல் வாளைகளையும் காட்டுயானை நாசம் செய்துள்ளது.


மின்சார இணைப்பு இல்லாத நிலையில் விவசாயிகளின் விவசாய கிராமத்திற்கு மின்சார இணைப்பும் யானைவேலியும் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.