ஒரே ஒரு பதிவால் ரசிகர்களிடம் சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா

0 2

ஒரே ஒரு பதிவால் ரசிகர்களிடம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா.

பிக் பாஸ் தமிழ் சீசன்களிலே ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யத்தை கொடுத்தது என்றால் பிக்பொஸ் 3 என்று தான் கூறவேண்டும்.

அதில் எல்லோராலும் விரும்பப்பட்டவர்கள் கவின்,லொஸ்லியா தான்.

பிக்பொஸ் வீட்டிற்குள் இருவரும் காதலிப்பதாக பெரிதும் இணையத்தில் பேசப்பட்டது. எனினும் இதுவரை இருவரும் தற்போது வரை எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை லாஸ்லியா தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு கீழ், ரசிகர் ஒருவர் ’கவினை உண்மையா இன்னும் லவ் பண்றீங்க போல’ என கமெண்ட் செய்திருந்தார்.

மற்றொரு நபர் ’ஹலோ அண்ணி கவின் அண்ணன் எப்படி இருக்காரு? கவின் லாஸ்லியா தான் எங்களுக்கு எப்போதும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து எந்த ஒரு மறுப்பதிவும் லாஸ்லியா இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.