வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்

0 0

வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
வவுனியா தலைமை காவல் நிலையத்திற்கு முன்பாக நேற்று காலை மணிக்கூட்டுக்கோபுரம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற அல்ரோ ரக கார் பிரதான கண்டி வீதியில் செல்ல முற்படும்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பப் பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவர் உடனடியாக காவல்துறையினரால் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய கார் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.