A9 வீதியில் PCR பரிசோதனை தொற்றாளர்களும் கண்டு பிடிப்பு

0 0

யாழ் கண்டி ஏ9 வீதியில் எழுமாற்றான PCR பரிசோதனைகள்.
தொற்றாளர்களும் கண்டுபிடிப்பு.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட கண்டிவீதியின் மூன்று இடங்களில் எழுமாற்றான PCR பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் எழுதுமட்டுவாள் சந்தி பொலிஸ் சோதனைச்சாவடி,கொடிகாமம் தொடருந்து நிலையம்,நாவற்குளிச் சந்தி போன்ற இடங்களில் இப்பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இதில் யாழ்மாவட்ட சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்தும் சுழற்சி முறையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றி சோதனைகளை நடாத்துகின்றனர்.

இவ் எழுமாற்றான பரிசோதனையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.