யாழ்.பருத்தித்துறையில் மதுபோதையில் வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓடியவருக்கு தண்டப்பணம்

0 35

மதுபோதையில் வாகன அனுமதி பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்துமாறு பருத்தித்துறை நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 24.01.2021.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி போக்குவரத்து பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. இதில் குறித்த நபர் மது போதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் அவரிடம் விசாரணை நடாத்திய போது வாகன அனுமதி பத்திரமின்றியும் காணப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு 50 ஆயிரம் பணம் தண்டமாக செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. குறித்த நபர் கரணவாய் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.